/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபத்தான நிலையில் மின் கம்பம் விபத்திற்கு முன் தேவை நடவடிக்கை
/
ஆபத்தான நிலையில் மின் கம்பம் விபத்திற்கு முன் தேவை நடவடிக்கை
ஆபத்தான நிலையில் மின் கம்பம் விபத்திற்கு முன் தேவை நடவடிக்கை
ஆபத்தான நிலையில் மின் கம்பம் விபத்திற்கு முன் தேவை நடவடிக்கை
ADDED : மார் 31, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி பிசிண்டி குண்டாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் அருகே பிசிண்டி மயானத்திற்கு செல்லும் மின்கம்பம் உள்ளது.
பாலத்திற்கு வேலை செய்யும்போது அப்பகுதியில் மண் அள்ளியதால் மண் சரிவு ஏற்பட்டு மின் கம்பம் சாய்ந்துள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் வயர் தொங்குகிறது. இதனை ஒட்டி அடிக்கடி வாகனங்களில் மக்கள் சென்று வருவதால் விபத்து அச்சம் உள்ளது.
லேசான காற்றுக்கு முற்றிலும் சாய்ந்து விழும் நிலை உள்ளதால், விபத்திற்கு முன் சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.