/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவுசிகா நதிக்கரையில் கொட்டும்குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
கவுசிகா நதிக்கரையில் கொட்டும்குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
கவுசிகா நதிக்கரையில் கொட்டும்குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
கவுசிகா நதிக்கரையில் கொட்டும்குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஏப் 17, 2024 06:36 AM

விருதுநகர், : விருதுநகர் வழியாக செல்லும் கவுசிகா நதிக்கரைகளில் தொடர்ந்து குப்பை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகரின் கவுசிகா நதியில் கழிவு நீர் கலந்து மாசடைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முட்புதர்கள் அடர்ந்து நதி இருக்கும் இடமே தெரியாமல் காடு போல காணப்படுகிறது. இதனால் நீர்நிலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நதிக்கு வரும் போதே மாசடைந்து விடுகிறது.
கவுசிகா நதியின் கரைப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வரும் குப்பையை அருகேயுள்ள கரைப்பகுதியில் கொட்டி விடுகின்றனர். அதே போல கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் தினமும் சேரும் குப்பையை நகராட்சி குப்பை தொட்டியில் கொட்டாமல் வாகனங்களில் வந்து ஆங்காங்கே உள்ள கரைப்பகுதி இடங்களில் கொட்டி விடுகின்றனர். இதை வழக்கமாக வைத்திருப்பதால் கரைப்பகுதிகளை குப்பை கொட்டும் கிடங்காக மாற்றிவிட்டனர்.
மேலும் சில இடங்களில் இறைச்சி கழிவுகளையும் கொட்டி விட்டு செல்வதால் துார்நாற்றம் உண்டாகி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே கவுசிகா நதிக்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

