/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜல்லி பரப்பி 5 மாதங்கள் ஆகியும் முடியாத பணி
/
ஜல்லி பரப்பி 5 மாதங்கள் ஆகியும் முடியாத பணி
ADDED : மே 27, 2024 12:31 AM

காரியாபட்டி:
காரியாபட்டி எஸ்.கடம்பன்குளத்தில் மயான ரோட்டில் ஜல்லிக்கற்கள் பரப்பி 5 மாதங்கள் ஆகின. பணிகள் முடிக்காததால் அக்கிராமத்தினர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரியாபட்டி எஸ்.கடம்பன்குளத்தில் 500 மீட்டர் துாரத்தில் மயானம் உள்ளது. மண் ரோடாக இருந்ததை தார் ரோடு போடப்பட்டது. சரிவர போடாததால் குறுகிய காலத்திலே ரோடு சேதமானது. குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்களாக இருந்ததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல முடியாமல் அக்கிராமத்தினர் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் ரோடை சீரமைக்க வேண்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக தார் ரோடு போட ஜல்லிகளை பரப்பினர். 5 மாதங்கள் ஆகியும் பணிகளை முடிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் இறந்தவர்களின் உடல்களை தூக்கிச் செல்ல முடியவில்லை. நடந்து செல்வோரின் கால்களை பதம் பார்க்கிறது. பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

