ADDED : ஜூலை 17, 2026 05:13 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஜூலை 18–
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய, சிற்பக் கண்காட்சி, பயிற்சி பட்டறையை கலெக்டர் சுகபுத்ரா துவக்கி வைத்தார்.
உள்ளூர் படைப்பாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், அவர்களது தனித்திறன்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக கலை பண்பாட்டுத்துறை சார்பில் விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 17 முதல் 19 வரை ஓவிய சிற்பக் கண்காட்சி, பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.
இக்குறுகிய கால பயிற்சிகளில் ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்கள் குறித்த பயிற்சியும், சிலைகள் உருவாக்கும் சிற்பக்கலை பயிற்சி பட்டறையும் நடத்தப்படுகிறது.
மண்டலக் கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் சிவப்புகழ் பங்கேற்றார்.
