/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகால் பணிகளை முழுமைப்படுத்த எதிர்பார்ப்பு
/
வாறுகால் பணிகளை முழுமைப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஆக 11, 2024 06:47 AM

விருதுநகர் : விருதுநகர் ரோசல்பட்டியில் வாறுகால் பணிகளை முழுமைப்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் ரோசல்பட்டியில் மல்லாங்கிணர் ரோட்டில் வாறுகால் பணிகள் துவங்கி பாதி வரை போடப்பட்டுள்ளன. இது முழுமையடைவில்லை.
இந்நிலையில் வாறுகாலில் வழித்தடத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி உள்ளது. அடுத்தடுத்து செல்ல செல்ல வாறுகால் வழித்தடமே மாயமாகி ஆக்கிரமிப்பில் உள்ளது. இது குறித்து மக்கள் புகார் தெரிவித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வழித்தடத்தை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் வாறுகாலை முழுமைப்படுத்தினால் ஆக்கிரமிப்பு ஏற்படாது. ஊராட்சி நிர்வாகம் இதை முழுமையாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

