/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதலோடு மோர், சர்பத் பந்தல் அமைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஏப் 02, 2024 06:35 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கோடை நெருங்குவதால் பல இடங்களில் மோர், சர்பத் பந்தல் விழாக்களில் அமைக்கப்படுகின்றன.
இவற்றில் தரமான முறையில் விநியோகிப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதலோடு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாவட்டம் முழுவதும் கோடை நெருங்கி வருவதாலும், அடுத்தடுத்து திருவிழாக்கள் நடப்பதாலும் மோர் பந்தல், சர்பத் பந்தல் போடுவது வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் சர்பத்தில் சிலர் செயற்கை நிறங்களை கலக்கும் வாய்ப்புள்ளது.
இதே போல் மோரில் அதிகப்படியான நீரையும், உப்பையும் கலக்கும் வாய்ப்புள்ளது.
விழாக்களில் இதை பலரும் சகஜமாக செய்வர். மோர், சர்பத் பந்தல் போன்றவை அங்கு வரும் பொதுமக்களுக்கு தான் விநியோகிக்கப்படும்.
எனவே அவற்றை நல்ல முறையில் விநியோகிப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறையினர் வழிகாட்டுதல் வழங்க வேண்டும். திருவிழாக்களில் செயற்கை நிறமுடைய குளிர்பானங்களை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
சர்பத்தில் நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். மேலும் முறையான அளவீட்டில் மோர் பந்தல், சர்பத் பந்தல் அமைக்கப்படுகிறதா, உடல் உபாதைக்கு வழிவகுக்காத வகையில் அமைத்திடவும் அறிவுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.