/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குளம் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
நரிக்குளம் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
நரிக்குளம் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
நரிக்குளம் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 12, 2025 06:30 AM
சத்திரப்பட்டி; சத்திரப்பட்டி அருகே நரிக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் நீர் பிடிப்பு பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிக்குளம் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள கண்மாய் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பின் கீழ் உள்ளது.
90 ஏக்கர் வரை பாசன பகுதிகளை கொண்டதுடன் கண்மாய் ஒட்டி பிரதானமாக நெல்லும் அடுத்தடுத்த பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது.
அய்யனார் கோயில் ஆற்றில் இருந்து வரும் நீர் படிப்படியாக சோழபுரம் கண்மாய், வடகரை, மேட்டு வடகரை, சிவலிங்காபுரம் கண்மாய் அடுத்து நீர் பெறுகிறது.
கிராம மக்களின் புழக்கத்திற்கான தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கண்மாய் துார்ந்து போய் மண் மேடாகிவிட்டது.
இதில் அதிக அளவு வளர்ந்து காணப்படும் சீமை கருவேல மரங்கள் நீர் இருப்பையும் பெருமளவு பாதிப்பதால் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து விவசாயி மாரிமுத்து: ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு, தேவியாறு இரண்டின் வரத்து கால்வாய் நீரையும் பெறும் கடைமடை கண்மாயாக உள்ளது.
கடந்த ஆண்டை விட நல்ல மழை பெய்தும் தேவியாற்றின் தடுப்பணை பராமரிப்பு இல்லாததால் கண்மாய்க்கு தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் நெல் சாகுபடி அளவும் குறைந்துள்ளது.
இந்நிலையில் சீமை கருவேல மரங்களும் அதிகரித்து வளர்ந்து புதர் மண்டி உள்ளது.
தண்ணீரை உறிஞ்சும் இவற்றை அகற்றி கண்மாயை துார்வார வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.