ADDED : ஜூலை 02, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம், ஜூலை 3-
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்த பழனி முருகன் என்பவருக்கு
எஸ்.ராமலிங்காபுரத்தில் 10-ம் எண் நுால் தயாரிக்கும் ஓ.இ டெக்ஸ்டைல் மில் உள்ளது. இவரது குடோனில் பஞ்சு தயாரிப்பதற்கான பேல்களை அடுக்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த தீ விபத்தில் பஞ்சு பேல்களில் தீப்பற்றியது. ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வேகமாக பரவிய தீயில் பேல்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
