ADDED : ஏப் 26, 2024 01:05 AM

அ நிறம் | அளவு
சிவகாசி : சிவகாசியில் மின் கசிவு காரணமாக ஸ்கிரீன் பிரிண்டிங் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் சாந்தி. இவருக்கு சோலை காலனியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் ராஜேஷ் என்பவர் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் நடத்தி வந்தார். நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் இங்கு மின் கசிவு காரணமாக திடீரென தீப் பிடித்தது.
இதில் பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
