ADDED : மே 14, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், மே 15-
ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி போலீஸ் ஸ்டேஷன் அருகே சிவகாசியில் இருந்து பட்டாசு பண்டல்களை ஏற்றிக்கொண்டு குஜராத் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்று அதிகாலை சிவகாசியில் பட்டாசு பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மல்லி வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் நான்கு வழி சாலை நோக்கி வந்தது. லாரியை மதுரை மாவட்டம் பேரையூர் சேர்ந்த ராம்குமார் 29 என்பவர் ஓட்டி வந்தார்.
காலை 6:00 மணிக்கு மல்லி போலீஸ் ஸ்டேஷன் அருகே மெயின் ரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ராம்குமார் லேசான காயமடைந்தார். தீ விபத்தோ, உயிர் சேதமோ இல்லை.
மல்லி போலீசார், சிவகாசி தீயணைப்பு துறையினர் லாரியை மீட்டனர்.
