/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதுகாப்பு பயிற்சியில் பட்டாசு ஆலை மேலாளர்கள் போர்மேன்கள் பங்கு பெறுவது அவசியம்
/
பாதுகாப்பு பயிற்சியில் பட்டாசு ஆலை மேலாளர்கள் போர்மேன்கள் பங்கு பெறுவது அவசியம்
பாதுகாப்பு பயிற்சியில் பட்டாசு ஆலை மேலாளர்கள் போர்மேன்கள் பங்கு பெறுவது அவசியம்
பாதுகாப்பு பயிற்சியில் பட்டாசு ஆலை மேலாளர்கள் போர்மேன்கள் பங்கு பெறுவது அவசியம்
ADDED : மே 19, 2024 11:36 PM
சிவகாசி: மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பணி புரியும் மேலாளர்கள், போர்மேன்கள் தொழிலக பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு வராதது வெடி விபத்திற்கு ஒரு காரணமாகவும் கருதப்படுகிறது. எனவே விபத்தை தடுக்க பயிற்சி வகுப்பில் பங்கேற்பது அவசியமாகிறது.
மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பகோட்டை விருதுநகர் பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1074 பட்டாசு ஆலைகள் உள்ளன. ஒரு சில பட்டாசு ஆலைகளில் விதி மீறல்களால் அவ்வப்போது வெடி விபத்து ஏற்படுகிறது. அதே சமயத்தில் போர்மேன்கள், மேலாளர்கள், தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததாலும் வெடி விபத்து ஏற்படுகிறது.
எதிர்பாராமல் வெடி விபத்து ஏற்படுவது இயல்புதான் என்றாலும் மனிதத் தவறுகளால் ஏற்படும் வெடி விபத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை தவிர்ப்பதற்காக சிவகாசியில் உள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் ஒவ்வொரு வாரமும் 35 ஆலைகளில் பணிபுரியும் மேலாளர்கள், போர்ன்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இங்கு பயிற்சி பெற்ற போர்மென்கள், மேலாளர்கள் தங்கள் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவர். இந்தப் பயிற்சி வகுப்பிற்கு முதல் முறை வரத் தவறினால் ரூ. 5 ஆயிரம் ரூ. 10 ஆயிரம் தண்டனை கட்டணமாக சம்பந்தப்பட்ட அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும். 3வது முறையாக வரத் தவறினால் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என தொழிலக பாதுகாப்பு சுகாதாரம் பயிற்சி மையம் இணை இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆனாலும் பெரும்பான்மையான பட்டாசு ஆலை உரிமையாளர்கள் இது குறித்து கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில் இதற்காக தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற 35 பட்டாசு ஆலைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதில் 18 பட்டாசு ஆலைகளிலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. இதற்காக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விபத்தினை தவிர்ப்பதற்காக அரசு முயற்சி மேற்கொண்டாலும் அதனை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.
அதே சமயத்தில் கடந்த காலங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதாரம் பயிற்சி மையம் சார்பில் அதிகாரிகள் அந்தந்த ஆலைகளுக்கே சென்று தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவர். ஆனால் இப்போது அது பெரும்பாலும் கடைபிடிக்கப்படவில்லை.
மீட்டிங் நடத்துவதற்கான சூழல் பட்டாசு ஆலைகளில் இல்லாதது ஒரு காரணமாக உள்ளது. நுாற்பாலைகள், போன்ற ஒரு சில ஆலைகளில் தொழிலாளர்களுக்கு ஆலோசனை, பயிற்சி வழங்குவதற்காக அங்கேயே மீட்டிங் ஹால் இருக்கும்.
ஆனால் பட்டாசு ஆலைகளில் இதற்கு வாய்ப்பு இல்லை. எனவே பட்டாசு ஆலை சார்பில் மீட்டிங் நடத்துவதற்கான அரங்கம் ஏற்படுத்தித் தந்தால் பயிற்சி அளிப்பதற்கு வசதியாக இருக்கும் என அதிகாரிகள் நினைக்கின்றனர். எனவே இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

