/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மரத்தடியில் பட்டாசு; மூவர் மீது வழக்கு
/
மரத்தடியில் பட்டாசு; மூவர் மீது வழக்கு
ADDED : ஏப் 02, 2024 06:38 AM
விருதுநகர் : சிவகாசி அருகே கோபுரம் காலனியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா 39. இவர் சின்ன தாதம்பட்டியில் மரத்தடியில் சட்ட விரோதமாக தயாரித்த முழுமை பெறாத பூச்சட்டி வெடிகள் 50, சீனி வெடிகள் 5 கிலோ பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதே போல சிவகாசி வணக்காரர் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் 45. இவர் மரத்தடியில் லட்சுமி வெடி தயார் செய்ய பயன்படும் காலி குழாய்கள் 250 எண்ணம், முழுமை பெறாத வெடிகள் 80 எண்ணம், வெடிமருந்து 100 கிராம் பதுக்கி வைத்திருந்தார்.
மேலும் மிளகாய்பட்டியைச் சேர்ந்த சுப்பையா 73. இவர் மரத்தடியில் பூச்சட்டி வெடியின் காலி அட்டை பெட்டிகள் 120 எண்ணம், முழுமை பெறாத பூச்சட்டிகள் 55 எண்ணம், வெடிமருந்து 100 கிராம் பதுக்கி வைத்திருந்ததை வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் பொன்மீனா கண்டறிந்து பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிந்தார்.

