ADDED : ஆக 04, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஆக 5-
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் 42 வது பேட்ஜ், புத்தாக்க பயிற்சி துவக்க விழா இணை வேந்தர் டாக்டர் அறிவழகி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் பயிற்சிகளை துவக்கி வைத்தனர். துணைவேந்தர் நாராயணன் வரவேற்றார். பதிவாளர் வாசுதேவன் பல்கலைக்கழக பேராசிரியர்களை அறிமுகப்படுத்தியும், டீன் கல்பனா புத்தக பயிற்சிகள் பற்றியும் பேசினர்.
சென்னை புட் ஹப் மென்பொருள் தீர்வுகள் நிறுவன மனித வள தலைவர் சுரேஷ் ஆடே தலைமை உரையாற்றினார். விழாவில் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் செல்வபழம் நன்றி கூறினார்.
