/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்ட விரோத பட்டாசு உற்பத்தி ஐந்து பேர் கைது
/
சட்ட விரோத பட்டாசு உற்பத்தி ஐந்து பேர் கைது
ADDED : ஜூலை 30, 2024 10:55 PM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் அட்டை தயாரிக்கும் கம்பெனியில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். 80 கிலோ மணி மருந்து, பேன்சி ரக பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தங்கல் குறுக்குப்பாதையில் குடியிருப்பு பகுதியில் விநாயகா பேஸ்டிங் அட்டை கம்பெனியில் சிவகாசி கிழக்கு எஸ்.ஐ., க்கள் ஆனந்தகுமார், காசியம்மாள், போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரியவந்தது. மேலும் இருப்பு வைக்கப்பட்டிருந்த 80 கிலோ மணி மருந்து , பேன்சி ரக பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டாசு தயாரித்த சிவகாசி ஏ.ஜே. நகரை சேர்ந்த தலித்ராஜா 47, முனீஸ்வரன் காலனி மோகன் 42, காளியம்மன் கோயில் தெரு கண்ணன் 50, , சதீஷ்குமார் 30, முனியசாமி 49, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி., சுப்பையா, இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரித்தனர்.