ADDED : ஜூலை 24, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
சாத்துார், ஜூலை 25 -
நென்மேனி புனித இன்னாசியார் சர்ச் 137 வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
பாதிரியார் முரளி ஆனந்த் கொடியேற்றி சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து கூட்டுத் திருபலி பூஜை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி ஜூலை 30, 31ல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை திரு இருதய ஆண்டவர் ஆலயம் சார்பில் பாதிரியார் காந்தி தலைமையில் விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
