ADDED : மே 14, 2024 09:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி,: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் 40, ஆடு வியாபாரி. இவருக்கும் காரியாபட்டி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வைரஜோதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இது தொடர்பாக ஓராண்டாக பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் கள்ளக்காதலியின் கணவர் ராமச்சந்திரன், மகன் திருமாலுக்குச் சென்று மிரட்டல் விடுத்து வந்தனர்.
நேற்று இரவு 9:00 மணிக்கு மீனாட்சிபுரத்திலிருந்து டூவீலரில் ராமநாதன் வீடு திரும்பும் போது, எஸ்.கல்லுப்பட்டி புளியங்குளம் அருகே வழிமறித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

