/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் பதித்து நான்கு மாதம் ஆச்சு திருத்தங்கலில் தண்ணீர் வினியோகம் இல்லை
/
குழாய் பதித்து நான்கு மாதம் ஆச்சு திருத்தங்கலில் தண்ணீர் வினியோகம் இல்லை
குழாய் பதித்து நான்கு மாதம் ஆச்சு திருத்தங்கலில் தண்ணீர் வினியோகம் இல்லை
குழாய் பதித்து நான்கு மாதம் ஆச்சு திருத்தங்கலில் தண்ணீர் வினியோகம் இல்லை
ADDED : செப் 17, 2024 04:46 AM
சிவகாசி, : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 21வது வார்டு முனீஸ்வரன் காலனியில் குழாய் பதித்து நான்கு மாதம் ஆகியும் தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால் குடியிருப்புவாசிகள் அவதியில் விலைக்கு வாங்கி வரும் பரிதாப நிலை உள்ளது.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 21வது வார்டு முனீஸ்வரன் காலனியில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள மூன்று தெருக்கள் புழக்கத்திற்கான தண்ணீர் இல்லாத நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு தண்ணீர் வினியோகம் செய்வதற்காக குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இப்பகுதி மக்களுக்கு இரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் அது போதவில்லை. இதனால் மக்கள் குளிக்க துணி துவைக்க என புழக்கத்திற்கும் தண்ணீ விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். கூலி வேலை செய்யும் இவர்களால் தினமும் தண்ணீர் விலைக்கு வாங்குவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் உடனடியாக தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெள்ளைச்சாமி, பலசரக்கு கடை ,முனீஸ்வரன் காலனி, குழாய் பதிக்கப்பட்டு நான்கு மாதம் ஆகியும் தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோடும் சீரமைக்கப்படவில்லை. எனவே ரோட்டினை சீரமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.