/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமேனிநாதர் கோயில் அருகே குப்பை கொட்டி எரிப்பு
/
திருமேனிநாதர் கோயில் அருகே குப்பை கொட்டி எரிப்பு
ADDED : பிப் 27, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி; அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி வரும் ரோட்டில் உள்ள திருச்சுழி திருமேனிநாதர் கோயில் காம்பவுண்ட் சுவர் அருகில் ஊராட்சியினர் குப்பை குவித்து வைக்கின்றனர்.
அங்குள்ள குப்பைத் தொட்டி நிறைந்து போனாலும் அப்புறப்படுத்துவது இல்லை. சுற்று பகுதியில் குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் ஏற்படும் புகை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதார கேட்டை ஏற்படுத்துவதுடன் பக்தர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் கோயில் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும் குப்பையை கொட்டி எரிக்க கூடாது எனவும் ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.

