/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர்வரத்து ஓடையில் குப்பை; போக்குவரத்து நெருக்கடி
/
நீர்வரத்து ஓடையில் குப்பை; போக்குவரத்து நெருக்கடி
ADDED : மே 22, 2024 07:45 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: நீர்வரத்து ஓடையில் குப்பைகள், சுகாதார வளாகம் அருகே சுகாதாரத் கேடு, போக்குவரத்து நெருக்கடி, சேதமடைந்த மெயின் ரோடு, டவுன் பஸ்கள் பற்றாக்குறையால் சிரமம் என பல்வேறு குறைபாடுகளால் மம்சாபுரம் பேரூராட்சி 17வது வார்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மம்சாபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ராஜபாளையம் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த வார்டில் பல்வேறு குறுகிய தெருக்களில் கழிவுநீர் வாறுகால்களில் சுகாதாரக் கேடு காணப்படுகிறது.
மெயின் ரோடு சேதடைந்து குண்டும், குழியுமாக மழை பெய்தால் சகதி, வெயில் அடித்தால் புழுதி ஏற்படும்நிலை காணப்படுகிறது. மெயின் ரோட்டில் மின் கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. வாழைக்குளம் கண்மாயிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து ஓடையில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் , ராஜபாளையம் உட்பட பல்வேறு வெளியூர்களை சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்லும் நிலையில் பஸ் ஸ்டாப்பில் உள்ள சுகாதார வளாகத்தை சுற்றி சுகாதார கேடு காணப்படுகிறது. இதனால் அதனை பயன்படுத்த வெளியூர் மக்கள் அச்சப்படுகின்றனர்.
மம்சாபுரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வந்து செல்ல போதியளவிற்கு பஸ்கள் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் 12 பேர் பயணிக்கும் நிலை காணப்படுகிறது. அதிகளவில் மக்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை வசதி இல்லாததால் வெயிலுக்கும், மழைக்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

