/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாதம் ரூ.300 குப்பை வரி: சாலை வியாபாரிகள் மனு
/
மாதம் ரூ.300 குப்பை வரி: சாலை வியாபாரிகள் மனு
ADDED : மே 21, 2024 07:11 AM
விருதுநகர் : நடை பாதையோரம் வியாபாரிகள் வாழ்வாதார நல சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்தமனு:
விருதுநகர் நகராட்சி நிர்வாகம் மே மாதம் முதல் மாதந்தோறும் ரூ.300 குப்பை வரி செலுத்த நிர்பந்தித்து வசூலித்து வருகிறது. மாதம் ஒரு தள்ளுவண்டிக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு ரூ.3600 என்று வசூலிக்க உள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். கொடுக்காவிட்டால் குப்பை எடுக்க மறுக்கின்றனர்.
மேலும் ரூ.300 செலுத்த தவறினால் கடைபோட அனுமதி மறுக்கின்றனர். நகராட்சியில் ஏலம் எடுத்தவர்கள் ரூ.50 வீதம் மாதம் ரூ.1500 என வசூல்செய்கின்றனர்.
இத்தகைய நெருக்கடியில் சாலையோர வியாபாரிகள் தவிக்கிறோம்.வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ள எங்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும், என்றார்.

