ADDED : செப் 11, 2026 07:45 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கையும், த.வெ.க., அரசின் தனியார் மயத்தையும் கண்டித்து வாயிற்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். பொதுச்செலயாளர் ராஜசெல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சில் செயலாளர் மாடசாமி, நிர்வாகிகள் சவுந்தரராஜ், அண்ணாதுரை பேசினர். பொருளாளர் திருவேட்டை போத்தி நன்றிக்கூறினார்.
