நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : கோவில்பட்டி கே.ஆர்.கலை, அறிவியல் கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
முதல்வர் மதிவண்ணன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் கணேஷ் குமார், செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். சண்முகசுந்தரம் வரவேற்றார். நிதிநிலை ஆண்டறிக்கையை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் குமார் வாசித்தார்.
எதிர்கால திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கணினி அறிவியல் துறை, கணிதவியல் துறை, நுண்ணுயிரியல் துறை, வணிகவியல் துறை, உயிர் வேதியல் துறை மற்றும் ஆங்கிலத்துறை முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.