/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெடுஞ்சாலைத்துறையில் பொது மாறுதல் பொறியாளர் சங்கம் கோரிக்கை
/
நெடுஞ்சாலைத்துறையில் பொது மாறுதல் பொறியாளர் சங்கம் கோரிக்கை
நெடுஞ்சாலைத்துறையில் பொது மாறுதல் பொறியாளர் சங்கம் கோரிக்கை
நெடுஞ்சாலைத்துறையில் பொது மாறுதல் பொறியாளர் சங்கம் கோரிக்கை
ADDED : ஏப் 05, 2024 12:41 AM
விருதுநகர்:நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி, இளநிலை பொறியாளர்களைபொது பணியிட மாறுதல் செய்யநெடுஞ்சாலைத்துறைபட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம், பராமரிப்பு, நபார்டு, கிராம ரோடுகள், திட்டங்கள், பெருநகரம், தேசிய நெடுஞ்சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், தர உறுதி ஆராய்ச்சி, திட்டம்- வடிவமைப்பு - ஆய்வு, சென்னை கன்னியாகுமரி தொழில் தட திட்டம் ஆகிய அலகுகள் செயல்பட்டு வருகிறது.
இதில் பணியாற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் பொது பணியிட மாறுதல் இல்லாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
விருப்ப மாறுதல் என்ற பெயரில் பணியாற்றி வரும் அதே அலகுகளுக்கு செல்வாக்கை பயன்படுத்தி பணிமாறுதல் பெறுகின்றனர்.
ஒரே இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோர் மன உளைச்சலோடு உள்ளனர். எனவே இந்தாண்டாவது 3 ஆண்டு ஒரே இடத்தில் பணியாற்றிவர்களை பட்டியலிட்டு பொது பணியிட மாறுதல் வழங்க வேண்டும். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் பொறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

