/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆடுவதைக்கூடம் இருந்தும் ரோட்டில் அறுக்கப்படும் ஆடுகள்
/
ஆடுவதைக்கூடம் இருந்தும் ரோட்டில் அறுக்கப்படும் ஆடுகள்
ஆடுவதைக்கூடம் இருந்தும் ரோட்டில் அறுக்கப்படும் ஆடுகள்
ஆடுவதைக்கூடம் இருந்தும் ரோட்டில் அறுக்கப்படும் ஆடுகள்
ADDED : மே 19, 2024 05:01 AM
சாத்துார் ; சாத்துார் நகராட்சியில் ஆடுகள் அறுப்பதற்காக ஆடுவதைக்கூடம் கட்டப்பட்டிருந்த போதும் ரோட்டின் ஓரத்தில் ஆடுகள் அறுத்து விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
சாத்துாரில் மெயின் ரோடு, மேலக் காந்தி நகர், கீழ்காந்தி நகர், அண்ணா நகர் ,குருலிங்கபுரம், நடராஜா தியேட்டர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் புற்றீசல் போல ஆட்டு இறைச்சிக் கடைகள் சாலை ஓரத்தில் உருவாகி வருகின்றன.
ஆடுகளை உயிருடன் தங்கள் கடை முன்பு கட்டி வைக்கும் வியாபாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் ஆடுகளை அறுத்து விற்பனை செய்கின்றனர். பொதுவாக நகராட்சி பகுதிகளில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்பவர்கள் ஆடு வதை கூடத்தில் கால்நடை மருத்துவரின் சான்று பெற்று நகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் ஆடுகளை அறுத்து விற்பனை செய்யவேண்டும்.
சனி, ஞாயிறு மற்றும் திருவிழா சமயங்களில் திடீரென உருவாகும் இந்த சாலையோர கடைகளில் இது போன்ற சான்றுகள் ஏதும் இருப்பது கிடையாது. நோய் பாதித்த ஆடுகளை இறைச்சியாக்கி விற்பனை செய்யும் போது இதனால் பொதுமக்கள் உடல் பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் உள்ளது.
கடைகளுக்கு முன்பாக ஆடுகளை கட்டி வைத்து பொதுமக்கள் பார்வையில் ஆடுகள் அறுக்கப்படுவதால் அந்த ஆடுகள் உண்மையில் நலமாக இருப்பதாக எண்ணி பலரும் அதன் இறைச்சியை வாங்கி செல்லுகின்றனர். முறையாக பரிசோதனை செய்யப்படாத ஆட்டு இறைச்சி உண்பவருவர்களுக்கு பல்வேறு உடல் பாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் விபரீதம் தெரியாமல் இது போன்ற கடைகளில் இறைச்சி வாங்கி உண்ணுகின்றனர்.
இறைச்சி கடைக்காரர்கள் ஆடுவதைக்கூடங்களுக்கு ஆடுகளைக் கொண்டு வந்து முறையான பரிசோதனைக்கு பின்னரே ஆடுகளை அறுத்து இறைச்சிக்காக விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு செய்யாதவர்கள் மீது தற்காக நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

