ADDED : ஜூலை 27, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 745 மனுக்கள் பெறப்பட்டன. டி.ஆர்.ஓ., ஆனந்தி, மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார்.
பட்டாசு ஆலை விபத்துக்களில் உயிரிழந்த தொழிலாளர்களின் 17 குழந்தைகளுக்கு ரூ.4.79 லட்சத்திற்கான பராமரிப்புத்தொகையை வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மோகனா, இணை இயக்குனர்கள் ரவிச்சந்திரன், சித்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
