ADDED : மார் 14, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டியில் துப்பாக்கிச் சூடு என தகவல் பரவியதால் போலீசார் விசாரணையில் வதந்தி என தெரிய வந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
காரியாபட்டியில் நேற்று காலை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவருக்கு அவரது கணவர் அலைபேசியில் அழைத்து காரியாபட்டியில் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. உடனடியாக வீட்டுக்கு சென்று விடு என தகவல் தெரிவித்தார். இதையடுத்து பதட்டம் அடைந்து அப்பெண் அந்நிறுவன உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். சந்தேகம் அடைந்த அவர் தனக்கு வேண்டியவர்களிடம் விசாரித்தார். இத்தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் பள்ளத்துப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்ற லாரி டயர் வெடித்த சத்தம் கேட்டதை அறிந்தனர். இதனால் போலீசாரும், மக்களும் நிம்மதியடைந்தனர்.