ADDED : ஏப் 28, 2024 06:17 AM
விருதுநகர், ; ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வேலை வாய்ப்புத் துறை, சுப்ரஜா டெக்னாலஜிஸ், விஜயவாடாவுடன் இணைந்து ஏப். 1 முதல் ஏப். 5 வரை எத்திகல் ஹேக்கிங், சைபர் செக்யூரிட்டி பயிலரங்கம், ஏப். 6 ல் ஒரு நாள் ஹேக்கத்தான் நடந்தது.
ஒரு நாள் ஹேக்கத்தானில் மாணவர்களுக்கு மருத்துவம், எரிசக்தி, சில்லறை வணிகம் சார்ந்த துறைகளின் பாதுகாப்புச் சிக்கல்கள் தொடர்பான கேப்சர் தி பிளாக் சவால்கள் வழங்கப்பட்டது. இதில் 150 மாணவர்கள் பங்கேற்றனர்.
சுப்ரஜா டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் சாளுவடி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி நவீன், பர்பிள் டீமிங் தலைவர் ஸ்ருஜன் ஆகியோர் முன்னிலையில் பயிலரங்கம், ஹேக்கத்தான் நடந்தது. ஏற்பாடுகளை பயிற்சி, வேலை வாய்ப்புத் துறை தலைவர் உத்ரா, கணினி அறிவியல் துறை துணைப் பேராசிரியர் விக்னேஷ் சரவணன், விஜயலட்சுமி, குழுவினர் செய்தனர்.

