ADDED : ஆக 02, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துாரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், சாதி, மதவெறி இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது.
மாவட்ட தலைவர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னு பாண்டியன், முதலில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். கட்சி நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தன், மகாலிங்கம், செல்வம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
