/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடி, மின்னலுடன் கனமழை 4 மின்கம்பங்கள் விழுந்தது
/
இடி, மின்னலுடன் கனமழை 4 மின்கம்பங்கள் விழுந்தது
ADDED : ஜூன் 07, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
மாலை 5:15 முதல் கனமழை பெய்தது. இதில் பலத்த இடி, மின்னல் காற்றடித்தது. மின்னல் ஓளி பல இடங்களில் தென்பட்டதால் கண்களை கூச செய்தது. இடியின் சத்தமும் பயத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வச்சக்காரப்பட்டி ஊராட்சி மெயின் தெருவில் பலத்த காற்று, இடி மின்னலால் நான்கு மின்கம்பங்கள் விழுந்தன. உடனடியாக மின் தடையும் ஏற்பட்டது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின்வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்த பின் மீட்பு பணிகள் நடந்தன.