/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
யானை கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து மா, தென்னை சேதம்
/
யானை கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து மா, தென்னை சேதம்
யானை கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து மா, தென்னை சேதம்
யானை கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து மா, தென்னை சேதம்
ADDED : ஏப் 29, 2024 05:14 AM

சேத்துார்: ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானை கூட்டம் புகுந்ததால் தென்னை, மா விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஒற்றை பனக்காடு அமைந்துள்ளது. இங்கு அம்மையப்பன் 10 ஏக்கர் தென்னை, மா விவசாயம் செய்து வருகிறார். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் இவரது விளைநிலத்தில் யானை புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதற்கு மாற்றாக தென்னங்கன்றுகளை நட்டு இரண்டு வருடங்களாக பராமரித்து வந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து தோப்பில் குட்டியுடன் நுழைந்த யானை கூட்டம் 25 தென்னங்கன்றுகளை உடைத்தும் குருத்துகளை தின்றும் மா மர கிளைகளை சேதப்படுத்தி உள்ளது.
இதனால் ரூ.2 லட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காண விளை நிலங்களுக்குள் யானைகள் ஊடுருவ முடியாதபடி வேலி அமைக்கவும், சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

