/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
/
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஜூன் 27, 2024 11:55 PM
விருதுநகர் : விருதுநகரில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் பிளஸ் 1, 2 படிக்கும் 17 ஆயிரத்து 398 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இம்மாணவர்களுக்கு பிளஸ் 2 முடித்த பின் உயர்கல்விக்கு உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ., மத்திய பல்கலை சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.
இதில் கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:
ஐ.ஐ.டி., நீட், கிளாட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்வது என்பது மிகப்பெரிய காரியம் அல்ல. ஆண்டுக்கு 100 மணி நேரம் ஒதுக்கி அதை தொடர்ச்சியாக முயற்சி செய்தாலே போதும். ஆனால் இதனை ஆரம்பிப்பது எளிதாக உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலான மாணவர்கள் தொடர்ச்சியாக செய்வதில்லை. நீங்கள் செய்கின்ற சிறுமுயற்சிகள்மூலமாக உங்களுடைய குடும்பம் கடினமான பொருளாதார நிலையில் இருந்து மிகவும் உயர்ந்த பொருளாதார நிலைக்கு உயர முடியும், என்றார்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, வழிகாட்டுதல் வழங்கும்விதமாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.