தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி


ADDED : ஜூன் 29, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2024 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார், : சாத்துார் எஸ். ஆர் .என்.எம். கல்லுாரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

சாத்துார் சுற்றுப்பகுதியைசேர்ந்த அரசு,அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1 பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கலெக்டர் ஜெயசீலன் உயர்கல்வியில் அரசு நடத்தும் கல்லுாரிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், நீட், கிளாட், ஜே.இ.இ.மத்திய பல்கலைக்கழகம் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வதுஅதற்கான கட் ஆப் மார்க், உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேளாண்மை, மருத்துவ படிப்பில் உயர் கல்வியில் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தாங்கள் எப்படி அரசு பள்ளியில் இருந்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கு தேர்வு பெற்றோம் என்பதை விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us