ADDED : மே 22, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹிந்து முன்னணி சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்தவும், திருப்பணி பெயரில் தனி நபர்கள் நன்கொடை வசூலிப்பதை தடுக்கவும், முறைகேடுகள் இன்றி திருப்பணிகள் நடப்பதை அறநிலையத்துறை உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் தலைவர் பாண்டியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் யுவராஜ், மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் வினோத் குமார் ஆகியோர் பேசினர். நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

