ADDED : ஜூலை 26, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
அருப்புகோட்டை: அருப்புக்கோட்டையில் கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அருப்புகோட்டை வாழவந்தம்மன் கோயில் அருகில், அரசு கோயில்களில் மக்களிடம் வாங்கும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரியும், ஆதி காலத்து கோயில்களை மீட்க கோரியும், ஆதி கலாச்சாரங்களை காக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட செயலாளர் பிரம்மநாயகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் பாண்டி, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
