/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்தால் கண்டு கொள்ளாமல் விடப்படுது ஊரக இணைப்பு ரோடுகள் சிரமத்துடன் கடக்கும் வாகன ஓட்டிகள்

ADDED : செப் 01, 2024 05:04 AM

விருதுநகர் : விருதுகர் மாவட்டத்தில் ஊரக இணைப்பு ரோடுகள் பல சேதமடைந்தால் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. அப்பகுதிகளை கடக்க வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் இருந்து அடுத்த ஊராட்சியை இணைக்கும் ரோடுகள் ஊரக இணைப்பு ரோடுகள் என அழைக்கப்படுகின்றன. இவை ஒன்றிய பகுதகிளில் அதிகமாக உள்ளன. 12 அடி முதல் 16 அடி வரை அமையும் இந்த ரோடுகள் நெடுஞ்சாலைத்துறைகள் பராமரிக்கின்றன.
சிலவற்றை அருகில் உள்ள ஊராட்சிகளும் பராமரிக்கின்றன. இந்த ரோடுகள் சேதமடைந்தால் புகார் அளிக்கவும், சீரமைக்க வலியுறுத்தவும் கிராமப்புற மக்கள் பெரிதும் ஈடுபடுவதில்லை.
இந்த ரோடுகள் வழியாக நகர்ப்புறங்களுக்கு கட்டுமான, விவசாய கூலி பணிகளுக்கு சென்று விட்டு திரும்பும் தினக்கூலிகளான இவர்கள் இரவில் மின்விளக்கு வசதி இல்லையென்றாலும், ரோடு மோசமாக இருந்தாலும் குறை கூற முடிவதில்லை.
இந்நிலையில் கேட்பாரில்லாததால் துறை அதிகாரிகளும் இந்த ரோடுகளை கண்டு கொள்வதில்லை. இது போன்ற சேதமடைந்த ரோடுகள் விருதுநகர் மாவட்டத்தில் ஏராளம் உள்ளன. சேதமடைந்து போக்குவரத்து லாயக்கற்றதாக உள்ளன.இவற்றை உள்ளாட்சி அமைப்புகளும், நெடுஞ்சாலைத்துறையினரும் கண்டு கொள்வதே இல்லை.
வாகன ஓட்டிகள் மேடு, பள்ளத்தில் ஏறி இறங்கி செல்கின்றனர். இந்த ரோடுகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அந்த நடைமுறையும் பினப்பற்றப்படுகிறதா என தெரியவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் இது போல சேதமடைந்துள்ள ஊரக இணைப்பு ரோடுகளை சீரமைக்க முன்வர வேண்டும்.