/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்
/
விருதுநகரில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்
விருதுநகரில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்
விருதுநகரில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்
ADDED : ஏப் 01, 2024 06:32 AM

விருதுநகர் : விருதுநகரில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் தெருக்கள், ரோட்டில் செல்பவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர்.
விருதுநகரில் கடந்த சில ஆண்டுகளாக நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தெருக்கள், ரோட்டில் வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துாரத்தி சென்று விரட்டுதல், கடித்தல் ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படி வாகனத்தில் செல்பவர்கள் நாய்கள் துாரத்தும் போது விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது.
இதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ஒன்றாக கூட்டமாக சேர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளை நாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் நடக்கிறது. இது போன்ற சூழ்நிலை நிலவுவதால் குழந்தைகளை வெளியே விடுவதற்கு பெற்றோர் அஞ்சுகின்றனர்.
இப்படி அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சையை பெயரளவிற்கு கூட நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருதுநகரில் நாய்களால் கடிப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய போது மட்டும் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து நாய்களுக்கான தடுப்பூசியை நகராட்சி அதிகாரிகள் செலுத்தினர். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, நாய்களின் எண்ணிக்கை வழக்கம் போல் அதிகரித்து கொண்டு இருக்கிறது.
எனவே நகராட்சி பகுதியில் நாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக கருத்தடை சிகிச்சையை உடனடியாக செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

