தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கற்றல், உடல் திறனை மேம்படுத்த காலை உணவு திட்டம் துவக்கம்

கற்றல், உடல் திறனை மேம்படுத்த காலை உணவு திட்டம் துவக்கம்

கற்றல், உடல் திறனை மேம்படுத்த காலை உணவு திட்டம் துவக்கம்


ADDED : ஜூலை 16, 2024 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை : கற்றல் மற்றும் உடல் திறனை மேம்படுத்துவதற்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது, என அருப்புக்கோட்டை அருகே துவக்கொல்லியில் காலை உணவு திட்ட துவக்க விழாவில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார்.

அருப்புகோட்டை அருகே குல்லூர்சந்தை வீரப்பா வித்யா துவக்க பள்ளியில் காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசியதாவது : முதல்வர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். கிராம நகர்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும் குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை கருத்தில் கொண்டு மாணவர்களின் கற்றல் மற்றும் உடல் திறனை மேம்படுத்துவதற்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 395 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2,23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 23 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 258 மாணவ மாணவியர்களும் பயன் அடைவர்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் பேச்சியம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, உதவி இயக்குனர் விசாலாட்சி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us