நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசியில் சிவகாசி கல்வி மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் கலை மற்றும் கண்ணில் தெரியும் கடவுளர்கள் என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி நடந்தது.
பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன் பேசினார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது:
ஆசிரியர்கள் சிறந்த ஊக்குவிப்பாளர்களாக இருக்க வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் சமூக பொருளாதார சூழ்நிலைகளை பற்றி ஆசிரியர்களுக்கு தெரியும்.
கல்வியின் வழியாகத்தான் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், சிவகாசி கல்வி மாவட்ட 750 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.