நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி ; சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர். பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி. கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது.
கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கலைக் கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி வரவேற்றார். முரளீதரன் புத்தாக்கப் பயிற்சி வழங்கினார். மாணவர்களிடையே கற்றலை மேம்படுத்துவது, கற்பிப்பதில் புதிய முறையை ஏற்படுத்துவது போன்றவற்றை விளையாட்டின் மூலம் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வியல் கல்லுாரி முதல்வர் கண்ணன் நன்றி கூறினார்.-----