நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் மைலான் லேபரட்டரீஸ் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் நேர்முகத் தேர்வு நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். மருந்து நிறுவன இயக்குனர் கோபு சங்கர் மற்றும் அலுவலர்கள் பழனி குமார், முரளி, ஜெயக்குமார், ராகுல் ராய், கீர்த்தி கைத்வாஸ் குழுவினர் நேர்முகத் தேர்வு நடத்தினர். இதில் பல்வேறு கல்லூரி சேர்ந்த 150 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் அன்புராஜ் செய்திருந்தார்.

