/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை விருதுநகர் டீன் சீதாலட்சுமி பேட்டி
/
கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை விருதுநகர் டீன் சீதாலட்சுமி பேட்டி
கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை விருதுநகர் டீன் சீதாலட்சுமி பேட்டி
கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை விருதுநகர் டீன் சீதாலட்சுமி பேட்டி
ADDED : ஏப் 04, 2024 06:04 AM
விருதுநகர், : விருதுநகர் அரசு மருத்துக்கல்லுாரி, மருத்துவமனையில் கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்குள்ளானவருக்கு முதன் முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர் தற்போது பூரண குணமடைந்து நலமுடன் உள்ளார் என டீன் சீதாலட்சுமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பொதுவாக 35 வயதை கடந்த ஒரு சில பெண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பு வருகிறது. சிறுநீர் பாதையில் உள் துவாரம், வெளி துவாரம் என இரு பிரிவுகள் உள்ளது. உடல் பருமன், மாதவிடாய் நின்றவர்கள், பிரசவத்திற்கு பின் சிறுநீர் பாதை தசைகள் பலவீனமடைந்தவர்களுக்கு இருமல், சிரிப்பு, தும்மல், நடப்பது, உட்காந்து எழுதலின் போது அடிவயிற்றில் அழுத்தம் அதிகமாகி சிறுநீரானது சிறுநீர் பைக்கு வருகிறது. சிறுநீர் பாதை தசைகள் பலவீனமானவர்களுக்கு உள் துவார தசைகள் குறைந்து திறந்த நிலையில் இருப்பதால் கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு ஏற்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி புடவை நனைவதால் திருமணம், நிச்சயதார்த்தம் ஆகிய விசேஷங்களில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மேலும் 'டைப்பர் ' பயன்படுத்தினாலும் ஒரு மாதத்திற்கு ரூ. 12 ஆயிரம் வரை செலவாகும். இந்த பிரச்னையை வெளியே சொல்ல முடியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சில ஹூஜல் உடற்பயிற்சிகள், ஈஸ்டோஜன் கீரிம் மூலம் சரிசெய்ய முடியும். ஆனால் அதிகமான கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் இருந்து தசையை எடுத்து சிறுநீர் பாதைக்கு பின்னால் வைக்கும் அறுவை சிகிச்சை செய்வதால் சிறுநீர் பாதையின் திறந்த நிலையிலுள்ள உள் துவாரத்தை மூடி விடலாம்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 58 வயது பெண் கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பால் 7 ஆண்டுகளாக அவதிப்பட்டார். இவர் 15 நாள்களுக்கு முன்பு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு டீன் சீதாலட்சுமி தலைமையில் டாக்டர்கள் ஜெயகிருஷ்ணா, விமலா, பிரபு ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது சிறுநீர் கசிவு பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து நலமுடன் உள்ளார், என்றார்.

