/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பார்வையற்றோரும் புத்தகம் படிக்க செயலி கண்டுபிடிப்பு
/
பார்வையற்றோரும் புத்தகம் படிக்க செயலி கண்டுபிடிப்பு
பார்வையற்றோரும் புத்தகம் படிக்க செயலி கண்டுபிடிப்பு
பார்வையற்றோரும் புத்தகம் படிக்க செயலி கண்டுபிடிப்பு
ADDED : செப் 13, 2024 04:47 AM
விருதுநகர்: விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பிரகதீஷ், தியானேஷ் பார்வையற்றவர்கள் எளிதில் புத்தகங்களை படிக்கும் வகையில் செயலியை உருவாக்கி உள்ளனர்.
மாணவர்கள் வடிவமைத்துள்ள மொபைல் செயலி மூலம் படிக்க வேண்டிய புத்தகத்தை செயலியில் உள்ள கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் போது அந்த புத்தகத்தில் உள்ள அனைத்து வாக்கியங்களும் ஓசிஆர் முறையை பயன்படுத்தி படித்து காண்பிக்கப்படும்.
இந்த செயலியை எம்.ஐ.டி., ஆப் இன்டென்டர் என்ற மென்பெருளை பயன்படுத்தி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த கண்டுபிடிப்பு இந்தாண்டு நிதிஅயோக், அடல் இன்னோவேஷன் மிஷன் இணைந்து நடத்திய தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற மாநில போட்டியில் முதல் 20 குழுக்களில் ஒன்றாக தேர்வாகி உள்ளது.
அடல் ஆய்வக பயிற்சியாளர் சங்கீதா, சுதாமணி, எல்.எல்.எப்., பயிற்சியாளர் செந்தில்குமார் வழிகாட்டுதல் படி உருவாக்கி உள்ளனர்.
நோபிள் பள்ளி செயலாளர் ஜெரால்டு ஞானரத்தினம், தாளாளர், முதல்வர் வெர்ஜின் இனிகோ, துணை செயலாளர் நிஜிஷ் பாராட்டினர்.

