ADDED : ஜூலை 31, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: ரேஷன் கடைகளில் இ–கே.ஒய்.சி., செய்யாத ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆக.
2ல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலம் விரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் இ–கே.ஒய்.சி., செய்யப்படும். மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் இ–கே.ஒய்.சி., கட்டாயம் பதிய வேண்டும். இதுவரை பதியாதவர்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். இது அனைத்து ரேஷன் கடைகளிலும் நடக்கும், என்றார்.
