/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முறையின்றி நடைபெறும் பாலப்பணிகள்-- வருவாய்த்துறையினர் ஆட்சேபனை
/
முறையின்றி நடைபெறும் பாலப்பணிகள்-- வருவாய்த்துறையினர் ஆட்சேபனை
முறையின்றி நடைபெறும் பாலப்பணிகள்-- வருவாய்த்துறையினர் ஆட்சேபனை
முறையின்றி நடைபெறும் பாலப்பணிகள்-- வருவாய்த்துறையினர் ஆட்சேபனை
ADDED : ஏப் 21, 2024 03:57 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் முடங்கியாற்றில் நடைபெறும் பாலப் பணிகள் ஆற்றின் நீர்வரத்தை சுருக்குவதாக வருவாய்த் துறையினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். பணிகள் முடிவடையும் நிலையில் தடை ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் முடங்கியாற்றில் இருந்து புதுக்குளம் செல்லும் கைலாந் தோப்பு ஆற்றின் பிரிவு உள்ளது. கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பொழிவு காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ரோட்டின் மறு பகுதியில் உள்ள மருங்கூர் விளை நிலப் பகுதிகளில் உள்ள கரும்பு, நெல், பருத்தி, காய்கறிகள் சாகுபடி நடைபெறும் சுமார் 1000 ஏக்கர் விவசாய பகுதிகளை கடந்து செல்ல தடை ஏற்பட்டு வந்தது.
விவசாயிகளும், தொழிலாளர்களும், விளைப் பொருட்களை கொண்டு செல்லும் பிரச்சனைக்கு 30 ஆண்டு சிக்கலுக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கி பணிகள் நடந்து முடிவடையும் நிலையில் நீர் வரத்தினால் ஆறு மாதங்களுக்கு பின் தற்போது பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஆற்றின் மொத்த அகல பரப்பான 17 மீட்டரில் 10 மீட்டர் அளவிற்கு மட்டும் பாலத்தினை சுருக்கி அதற்கு ஏற்ப பக்கவாட்டில் தடுப்பூச்சுவர் அமைத்து நீர் வரத்தை ஆக்கிரமிப்பதாக வருவாய் துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பணிகளுக்கு தடை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பணிகளுக்கு தடை வேண்டாம்
முருகேசன், விவசாயி: 30 ஆண்டு தொடர் கோரிக்கைக்கு பின் ஆற்றைக் கடந்து செல்ல தீர்வாக விவசாயிகளுக்கு பாலப் பணிகள் நடந்து வருகிறது. வருவாய்த் துறையினர் தற்போது கேள்வி எழுப்புவதால் பணிகள் தடை படுமோ என கவலையில் உள்ளோம். தொடக்கத்திலேயே நடவடிக்கை இருந்திருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் சிக்கல்
ராஜபாளையம் தாசில்தார் ஜெயபாண்டி கூறுகையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு நடைபெறும் பணிகளுக்கு முறையான ஒப்புதல் வழங்கப்பட்ட கடிதத்தை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டும் இதுவரை வழங்கவில்லை. ஆற்றின் நீர்வரத்தை பாதி அளவிற்கும் மேல் சுருக்கி அமைத்து வருகின்றனர்.
இதனால் எதிர்காலத்தில் அருகில் உள்ள பட்டா நிலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் விடுபட்ட பகுதிகளுக்கும் சேர்த்து பாலம் அமைக்க கருத்துரு அறிக்கை வழங்கியுள்ளோம். விவசாயிகள் பிரச்சனை குறித்து புரியாமல் கேள்வி எழுப்புகின்றனர். என்றார்.

