ADDED : மே 19, 2024 04:58 AM
அ நிறம் | அளவு
சிவகாசி, ; சிவகாசி முஸ்லிம் தைக்கா தெரு தக்வா பள்ளிவாசலில் 20 நாட்கள் மாணவர்களுக்கான கோடை கால இஸ்லாமிய பயிற்சி முகாம் நடந்தது.
பயிற்சி முகாமில் பேச்சு திறன், குர்ஆன் ஓதும் மற்றும் எழுதும் திறன், இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் யாதென்று அறியும் விளக்கங்கள் மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது.
பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. முஹம்மது பாரூக் உலவி, மார்க்க கல்வியின் அவசியம் குறித்து பேசினார். ஏற்பாடுகளை தக்வா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் செய்தனர்.
