/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீட்டுக்கு வீடு இலவசமாக ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி

ADDED : ஏப் 02, 2024 06:35 AM
சாத்துார் : குடிநீர் பிரசனையை தீர்க்க வீட்டுக்கு வீடு இலவசமாக ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி, என சாத்துாரில் பா.ஜ., விருதுநகர் வேட்பாளர் நடிகை ராதிகா தெரிவித்தார்.
சாத்துாரில் பேசியதாவது: 10 ஆண்டுகள் மத்தியில் பிரதமர்மோடி அரசு நல்லாட்சி கொடுத்துள்ளார். குடிநீர் பிரசனையை தீர்க்க வீட்டுக்கு வீடு ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி, இது முற்றிலும் இலவசம் இதற்காக யாரும் பணம் கட்ட தேவையில்லை.
மத்திய அரசு 32 ரூபாய்க்கு அரிசி விலைக்கு வாங்கி மாநில அரசுக்கு 29 ரூபாய் மானியத்தில் தருகிறது. 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி தான் வருவார்.
உங்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை மத்திய அரசிடம் பேசி வாங்கித் தருவேன். என்றார்.
நடிகர் சரத்குமார் பேசிய போது கூறியதாவது: சாத்துார் தீப்பெட்டி தொழிலுக்கு லைட்டரால் சோதனை வந்தபோது லைட்டரின் வரியை உயர்த்தி தீப்பெட்டி தொழிலை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. 8 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வரும் பட்டாசு தொழிலை காப்பாற்ற நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார்,என்றார்.
அண்ணாநகர், படந்தால், சுப்பிரமணியபுரம், தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், ஆலங்குளம், வெம்பக்கோட்டை, காளவாசல், அட்டைமில், சத்திரப்பட்டி, ஆகிய ஊராட்சிகளில் பிரசாரம் செய்தார்.