ADDED : ஜூன் 12, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூன் 13-
ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி நேற்று முதல் துவங்கியது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில் சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான் மக்களிடமிருந்து 43 கோரிக்கை மனுக்களை பெற்றார். 8 பயனாளிகளுக்கு இ- பட்டா வழங்கினார்.
தாசில்தார் அருளானந்தம், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.க்கள், மக்கள் பங்கேற்றனர். முன்னதாக தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஜூன் 16ல் மல்லி குறு வட்டத்திற்கும், ஜூன் 17ல் பிள்ளையார்குளம் குறுவட்டத்திற்கும் ஜமாபந்தி நடக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
