/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிசிண்டி பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை
/
பிசிண்டி பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை
ADDED : பிப் 22, 2025 06:56 AM
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பிசிண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சில மாணவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி பிசிண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை மாணவர்களுக்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டது.
மல்லங்கிணர் வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் மாணவர்களை ஆய்வு செய்தனர். இதில் ஒரு சில மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை அறிகுறி இருப்பதாக அறிந்தனர்.
அவர்கள் ஏற்கனவே அதற்கு மருந்து மாத்திரை எடுத்து வருவதும் தெரிந்தது. இது மற்ற மாணவர்களுக்கு காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியது
வட்டார மருத்துவ அலுவலர் வேல்விக்னேஷ், கூறியதாவது.
குடி தண்ணீர், சுற்றுப்புற சூழலை மருத்துவ குழு ஆய்வு செய்தபோது எந்த பாதிப்பும் இல்லை.
ஒரு சில மாணவர்கள் வெளியூர்களுக்கு சென்று வந்துள்ளனர். அவர்களுக்கு கண்கள் மஞ்சளாக தெரிந்தது. ஏற்கனவே சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருந்தது. அவர்களை சோதனை செய்து சிகிச்சை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது மற்ற மாணவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. யாருக்கும் காய்ச்சல் இல்லை. பீதி அடைய தேவையில்லை, என்றார்.