ADDED : மே 11, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர், மே 12-
ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் கீழ்த் தெருவை சேர்ந்தவர் முருகன் 45, இவருக்கு மேலத்தொட்டியபட்டி ரெங்கர்கோவில் பகுதியில் பண்ணை உள்ளது. இதில் ஆடுகள், கோழிகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது பண்ணையில் இருந்த செம்மறி கிடா ஒன்றை, வத்திராயிருப்பு பகுதியை 18 வயதிற்கு கீழான 2 சிறுவர்கள் திருடி டூவீலரில் தப்பி சென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
