நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : சிவகாசி அருகே விஸ்வநத்தம் அண்ணாமலைநகரைச் சேர்ந்தவர் தங்கவேல் 31. இவர் லோடுமேனாக பணி செய்து வருகிறார். விருதுநகர் மாரியம்மன் கோயில் தீச்சட்டி எடுப்பதற்காக வந்துள்ளார்.
இவர் நண்பர்கள் திவாகர், சதீஷ்குமார் ஆகியோர் மார்ச் 9 மதியம் 4:30 மணிக்கு ஆனைக்குட்டம் அணையில் குளிக்க சென்ற போது தங்கவேல் மது போதையில் இருந்ததால் தடுப்புச்சுவரில் துாங்கியுள்ளார். நண்பர்கள் வந்து பார்த்த போது துாங்கியவரை காணாததால் தேடியதில் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

